ராணிப்பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊரடங்கு விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டிருக்கிறதா என்று வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது சுவால் பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டிற்கு நகராட்சியினுடைய ஆணையரான ஆசிர்வாதம் 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.