விதியை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மாணவர்களுக்கு துணை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளம் வழியாக கலந்தாய்வு செய்யப்பட்டு சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவு அளித்த பிறகும் கல்லூரிக்குள் அனுமதி அளிக்கவில்லை. அதோடு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது .
இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு பல புகார்கள் வந்தது . இதனையடுத்து இதில் தொடர்புடைய கல்லூரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் இது பற்றிய அறிக்கைகள் அனைத்தும் தமிழக அரசிற்கு விரைவில் அனுப்பி வைப்போம் என்று இயக்குனரக வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.