Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதிய மீறி ஏன் செயல்படுதிங்க…. பறக்கும் படையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க கட்சியின் நிர்வாகியிடமிருந்து பறக்கும் படையினர் 33,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூரில் வாக்கினை சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ம.நீ.ம கட்சியின் நிர்வாகிகள் அத்தொகுதியின் பறக்கும் படை அதிகாரியான பிரேம்தாஸ் குமாருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர்.

இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அ.தி.மு.க நிர்வாகியான ராஜீவ் என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணங்களின்றி சுமார் 30,000 ரூபாயை வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து பறக்கும் படையினர் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |