வருமானவரி விதி-132 மத்திய நேரடிவரிகள் வாரியம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். இப்பிரிவு 155(18) வருமானத்தின் மறுகணக்கீட்டைக் கையாள்கிறது. வருமானத்தினை மீண்டுமாக கணக்கிடுவதற்கு படிவம் 69 பயன்படுத்தப்படுகிறது. இவ்விதி வணிகர்கள் செலுத்தவேண்டிய வரி மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் குறித்த தகவல்களை வழங்குகிறது. வணிக லாபத்தின் மீதான வரி குறித்த விதிகள் தெளிவாக இருக்கிறது. எனினும் அதன் மீது செலுத்தப்படும் செஸ் (அ) கூடுதல் கட்டணம் விலக்குக்கு உட்பட்டதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பிரிவு 155ல் திருத்தம் செய்யப்படும்வரை, செஸ் (அ) கூடுதல் கட்டணம் செலுத்துவது செலவாகக் கருதப்பட்டது. இதை கழிக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இருப்பினும் இந்த கோரிக்கையானது துணைப் பிரிவு 18 உடன் பிரிவு 155 உடன் சேர்ப்பதன் வாயிலாக முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் 29 செப்டம்பர் 2022 அன்று CBDT ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அவற்றில் மதிப்பீட்டாளர் சர் சார்ஜை திரும்பகோர அனுமதிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. வருமானத்தை கணக்கிடும்போது கூடுதல் கட்டணத்தில் கழித்தல் (அ) திரும்ப கோருதல் அனுமதிக்கப்படாது என்பது இந்த விதியில் இருந்து தெளிவாகிறது. இந்த நிலையில் இதற்குரிய விலக்குடன் வருமானத்தினை அறிவித்து இருப்பவர்கள் கணக்கீட்டின்போது மீண்டும் வரிசெலுத்த வேண்டும்.
அத்துடன் குறைந்த வருமானத்தில் செலுத்தவேண்டிய வரியில் பாதியை அபராதமாக செலுத்தவேண்டும். விதி 132ன் படி மதிப்பீட்டாளர்களுக்கு இது நிவாரணமாக இருக்கும். மீண்டுமாக கணக்கிடுவதற்கு படிவம்எண் 69ஐ 31 மார்ச் 2023 அன்று (அ) அதற்குமுன் சமர்ப்பிக்கவேண்டும். அதற்குப் பிறகுதான் வருமானம் மீண்டுமாக கணக்கிடப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் நிலுவைத்தொகையைச் செலுத்தவேண்டும். வரியைச் செலுத்தியபின், மதிப்பீட்டாளர் படிவம் எண். 70-ல் கட்டணம் செலுத்திய விபரங்களை மதிப்பீட்டு அதிகாரியிடம் அளிக்கவேண்டும்.