விக்டிம் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல இயக்குனர்கள் பா. ரஞ்சித், சிம்புதேவன், எம். ராஜேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தலாஜி படத்திற்கு விக்டிம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அமலா பால், பிரியா பவானி சங்கர், நாசர், பிரசன்னா, குரு சோமசுந்தரம், கலையரசன் மற்றும் தம்பி ராமையா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் எம். ராஜேஷ் மிரேஜ் கதையையும், இயக்குனர் வெங்கட் பிரபு கன்பெஷன் கதையையும், இயக்குனர் சிம்பு தேவன் கொட்டைப்பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும், பா ரஞ்சித் தம்மம் என்ற கதையையும் இயக்கியுள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தலைப்பில் நேரடியாக வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watch the official trailer of #Victim – Who is next? A SonyLIV Tamil original directed by @chimbu_deven,@rajeshmdirector @vp_offl, @beemji. Streaming exclusively only on #SonyLIV from the 5th of August.#VictimOnSonyLIV@AxessFilm @blackticketco #Nasser @priya_Bshankar pic.twitter.com/XBvihPOWst
— Sony LIV (@SonyLIV) July 19, 2022