நடிகை யாஷிகா தனது ரசிகர்களை வித்தியாசமான முறையில் முட்டாளாக்கி வைத்துள்ளார். நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாது. நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான், நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் நெஞ்சில் குண்டை தூக்கி போட்டார்.
இதனை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள யாஷிகா, எனக்கு திருமணமாகப் போகிறது. லவ் எல்லாம் செட்டாகாது. அரேஞ்ச் மேரேஜ் தான் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே என்னிடம் இல்லை. ஏப்ரல் ஃபூல் என்று கூலாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் கடுப்பில் உள்ளனர்.