பல மாதங்களாக ஏசியில் தங்கி இருந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர்
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த சாமி என்பவரது வீட்டில் உள்ளே ஏசியில் பாம்பு இருப்பதாக அந்த குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர். இதனால் வனத்துறையினருக்கு புகார் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மூன்று அடி நீள பாம்பை ஏசியின் உள்ளே இருந்து மீட்டனர். இதுபற்றி வனத்துறை ஊழியரான கண்ணதாசன் கூறுகையில், “பல மாதங்களாக இந்த பாம்பு ஏசியில் இருந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
காரணம் பாம்பு தனது சட்டையை ஏசியின் உள்ளே உரித்து இருந்தது. குளிருக்கு இதமாக இருப்பதனால் ஏசியின் உள்ளே பாம்பு சென்றுள்ளது. நீண்ட நாட்களாக வீட்டில் இருந்தவர்கள் ஏசியை பயன்படுத்தாமல் இருந்ததால் பாம்பின் சத்தம் கேட்டு எங்களுக்கு தகவல் கொடுத்தனர். நாங்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்து எப்படி பாம்பு வந்தது என்பது பற்றி ஆராய்ந்தோம். ஏசியின் காப்பர் வயர் வருவதற்காக போடப்பட்ட பாதையை மூடாமல் இருந்துள்ளனர்.
அதன் மூலமாக பாம்பு வந்தது தெரிந்துள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் கூறுகையில், “ஏசியில் இருந்து ஏதோ சத்தம் வந்ததால் எலி உள்ளே சென்றிருக்கலாம் என்று நினைத்து ஏசியை பயன்படுத்தாமல் இருந்தோம். தற்போது ஏசியின் உள்ளே இருந்து வந்த சத்தம் வித்தியாசமாக இருந்ததால் வனத்துறையினருக்கு புகார் அளித்தோம். நல்லவேளையாக விரைந்து வந்து பாம்பை பிடித்து விட்டனர்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.