நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வித்யாபாலன். இவர் தமிழில் காலா, நேர்கொண்டபார்வை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த வருடம் இவர் நடிப்பில் உருவான சகுந்தலா தேவி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள இந்த படத்தில் முகுல் சட்டா, ஷரத் சக்சேனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
A tigress always knows the way!
Ready to hear the #Sherni roar? Here’s the Official Teaser.
Trailer out, June 2.
Meet #SherniOnPrime, June 2021. @PrimeVideoIN @tseriesfilms@TSeries@Abundantia_Ent@vikramix@ShikhaaSharma03@AasthaTiku
#AmitMasurkar #BhushanKumar pic.twitter.com/Fre6hE5RwE— vidya balan (@vidya_balan) May 31, 2021
இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனமும், அபன்டன்டியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகிற ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஷெர்னி பட டிரைலரின் புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.