Categories
அரசியல்

விநாயகரின் வித்தியாசமான தோற்றம்…. என்ன அர்த்தம் தெரியுமா….? வெளியான சில தகவல்கள்….!!

விநாயகர் சதுர்த்தி வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக எந்த ஒரு சுப காரியங்களையும் தொடங்க வேண்டும் என்றால் முதலில் விநாயகரை தான் வழிபட வேண்டும். விநாயகரின் வாகனம் எலி ஆகும். விநாயகப் பெருமானின் உருவமானது வலிமைமிக்க யானை தலை, உடைந்த தந்தம், பானை வயிறு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்நிலையில் விநாயகரின் ஒவ்வொரு சிறிய தனித்தன்மையும் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதனை பின்வருமாறு காண்போம்.

பெரிய தலை: கேட்பதன் மூலம் ஞானம் பெற வேண்டும்.

பெரிய காதுகள்: அதிகமாக கேட்க வேண்டும்.

சிறிய வாய்: குறைவாக பேச வேண்டும்.

கோடாரி: மனதை கட்டுப்படுத்த வேண்டும்.

பெரிய வயிறு: வாழ்க்கையில் இருக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் அமைதியாக ஜீரணிக்க வேண்டும்.

பிரசாத்: உலகம் முழுவதும் உங்கள் காலடியில் இருக்கிறது.

சிறிய கண்கள்: கவனம் மற்றும் செறிவு.

ஒரு தந்தம் இல்லாதது: நல்லதை வைத்திருங்கள்; கேட்டதை தூக்கி போடுங்கள்.

ஆசிர்வாதம்: ஆன்மீக பாதையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

மோதகம்: அறிவையும், ஆன்மீகத்தையும் தேடும் பயணத்தின் முடிவில் ஓருவர் இனிமை அடைவதை குறிக்கும்.

Categories

Tech |