Categories
அரசியல் மாநில செய்திகள்

விநாயகரை வைத்து அரசியல் செய்தால்…. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டிடுவார்…. அண்ணாமலை சாபம்…!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்டிப்பாக நடைபெறும். விநாயகரை வைத்து அரசியல் செய்தால் அதே விநாயகர் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர எழுவார் என்று ஆவேசமாக பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள விழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை எதற்கு தடை செய்ய வேண்டும்? அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால் நடக்கவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்று அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தார்.

Categories

Tech |