Categories
உலக செய்திகள்

விநாயகர் உருவம் பொறித்த தங்ககட்டி இணையத்தில் விற்பனை…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

விநாயகர் சதுர்த்தியானது இந்த மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இங்கிலாந்திலுள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம்பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்ககட்டியை வெளியிட்டுள்ளது. அதில் விநாயகர் கால் அடியில் தட்டுநிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடையானது 20 கிராம் இருக்கிறது.

அத்துடன் அதன் விலையானது 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தங்க கட்டி ராயல் தங்கசாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சென்ற நவம்பர் மாதம் தீபாவளியையொட்டி லட்சுமி உருவம் பொறித்த தங்கக் கட்டியை ராயல் தங்கசாலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட 2 கடவுள்களின் உருவங்களும் வேல்ஸ் பகுதியிலுள்ள சுவாமி நாராயணன் கோயிலை சேர்ந்த நிலேஷ் கபாரியா ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |