நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலைகரைப்பு நிகழ்வுகளில் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில காவல்துறை அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் 14 பேர் தண்ணீரில் மூழ்கியும் மற்றும் ஐந்து பேர் மின்சார தாக்குதல் போன்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தின் போது பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. தமிழகத்திலும் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர்.ஹரியானா மாநிலத்தில் கூட நேற்று விநாயகர் சிலை கரைப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 வயது சிறுமியை மயக்க ஊசி போட்டு ஆட்டோவில் கடத்திச் சென்று மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.