ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சக்தி கோலாகலமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறிய காரியம் முதல் பெரிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டு தொடங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாகவே அவதாரம் என்றால் அனைவர் நினைவுக்கும் வருவதை விஷ்ணு பகவான் தான். ஆனால் விநாயகப் பெருமானும் பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.
வக்ரதுண்டா: விநாயகப் பெருமானின் முதல் அவதாரம் தான் இது. மட்சரா என்ற அரக்கன் மூன்று உலகங்கள் மற்றும் தேவர்களின் ராஜ்ஜியத்திற்கு பெரும் தொல்லை கொடுத்து வந்துள்ளான். அவனை அழிக்க சக்தி தேவியை அருள் புரிய தேவர்கள் தவம் இருந்தனர். அவர்களின் தவத்தை அடுத்து மனமிரங்கிய சக்தி வக்ரதுண்ட விநாயகரை தோற்றுவித்தார். சிங்கத்தை வாகனமாகக் கொண்டு எழுந்தருளிய வக்ரதுண்ட அந்த கொடூர அரக்கனை அழித்தார்.
ஏகதந்தா: விநாயகரின் இரண்டாவது அவதாரம். அதாவது ஒற்றைத் தந்தம் என்பதை குறிக்கிறது . அதிகாரம் உள்ளவன் ஆவணத்தால் ஆடினால் அதுவே அவனது அழிவுக்கு காரணம் ஆகிவிடும். விநாயகர் ஏகதந்தாவாக உருவெடுத்து ஆவணத்தின் உச்சத்தில் ஆடிய அரக்கனை அழித்தார்.
மஹோதரா: இதுதான் விநாயகப் பெருமானின் மூன்றாவது அவதாரம். அறியாமையை ஒழித்து எதிர்மறை எண்ணங்களை அழிக்க இந்த அவதாரத்தை எடுத்தவர் விநாயகர். புராணங்களின்படி மோகாசூரா என்ற மாய அரக்கனை எதிர்கொண்டு அவனை வீழ்த்தியதோடு இறுதியில் அவனது பாவங்கள் அனைத்தையும் மடித்தார் விநாயகர்.
கஜானன்: இது யானை முகம் கொண்ட அவதாரம் என்று பொருள். உலகில் இருக்கின்ற பேராசையை எதிர்த்து போராடவும் பாவங்களிலிருந்து விடுபடவும் விநாயகர் பெருமான் இந்த அவதாரம் எடுத்தார்.
லம்போதரா: கோபத்தின் அரக்கனாகிய க்ரோதாசுரனை எதிர்த்து போரிடவே விநாயகப் பெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். அவனது கோபத்தில் இருந்து உலகை விடுவிக்கும் நோக்கத்திற்காக இந்த அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
வி க்ன ராஜா:விநாயகப் பெருமான் எடுத்த அவதாரங்களில் மிகவும் பிரபலமானது இது. இதற்கு அனைத்து தடைகளையும் நீக்குபவர் என்று பொருள்.இந்த அவதாரத்தின் மூலம் எல்லா தடைகளையும் நீக்குபவர் விநாயகர் என்று அறியப்படுகிறது. இதில் தன்னை நாடி வருபவர்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுகிறது. இந்த அவதாரத்தில் வரேன்யன் என்பவருக்கு இவர் செய்த உபதேசம் தான் கணபதி கீதை.
கிருஷ்ணா பிங்காக்ஷா: கிருஷ்ணா கருமையான நிறம், பிங்கா புகை,அக்ஷா என்பது கண்களாகிய வார்த்தைகளை ஒருங்கிணைக்கும் இந்த அவதாரம் மேகங்கள் மற்றும் பூமியின் வழியே பார்த்து மக்களை வலியிலிருந்து விடுவிக்கும் விநாயகர் பெருமானின் திறனை குறிக்கும் கடைசி அவதாரமாகும்.