Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுங்க… கேரளாவில் என்னாச்சு தெரியுமா… தெளிவாக விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!!

கேரளாவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகையின் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காரணத்தால். அங்கு கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்..

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் தொடங்குவதற்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.. இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் என்பது பொது இடங்களில் சிலை வைத்து விழாவை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதே தவிர, தனி நபர் அவர்களுடைய வீடுகளில் கொண்டாடுவதற்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை..

மேலும் தமிழக அரசசின் கட்டுப்பாடு என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தமிழகத்திலும் இதற்கான கட்டுப்பாடுகள் என்பது விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகையின் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காரணத்தால், அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று என்பது மிக அதிகமாக பதிவாகியுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் முழுமையாக குறைந்து இருந்தாலும் கூட முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கொரோனா தொற்றுஅதிகரித்து வருகிறது. அதனால் தான் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெளிவாக விளக்கமளித்துள்ளார்..

Categories

Tech |