மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைக்க சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
சட்டசபையில் இன்று பாஜக எம்எல்ஏ காந்தி பேசும்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம் எனவும் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிட்டார்.