Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி… “அனுமதி கொடுங்க”… நாங்க தலையிட முடியாது… உயர்நீதிமன்றம் அதிரடி!!

விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபடுமாறு அறிவித்துள்ளது.. இதனையடுத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்..

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  கொரோனா காலத்தில் பொது நலனை கருத்தில் கொண்டே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.. மத உரிமைகளை விட வாழ்வதற்கான உரிமை முக்கியம், அரசின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தது.

Categories

Tech |