Categories
அரசியல்

விநாயகர் சதுர்த்தி…. அருகம் புல்லும், எருகம் பூவும் வைத்து வழிபட காரணம் என்ன?…. பிரமிக்க வைக்கும் வரலாறு இதோ….!!!!

விநாயகருக்கு பொதுவாகவே அருகம்புல் மற்றும் எருக்கம் பூவை வைத்து வழிபடுவார்கள். அதற்குப் பின்னால் உள்ள வழிபாட்டு விவரம் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளையாரப்பா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்று என்று மூட்டை மூட்டையாய் தேங்காயை உடைத்து வழிபடுவார்கள். விநாயகரின் புராணக் கதை என்னவென்றால் மகோர்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

ஒரு யாகத்திற்காக புறப்பட்ட சமயத்தில் ஒரு அசுரன் அவர்களை தடுத்து நிறுத்தினான்.யாகத்திற்காக விநாயகர் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனை பொடி பொடியாக்கினார். எந்த ஒரு செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதனை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கம் உண்டு. தனக்கு வந்த தடைகளை தேங்காய் உடைத்து தகர்த்ததன் மூலம் லிங்கேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

இதனால்தான் சிதறுக்காய் உடைக்கும் பழக்கமும் உருவானது. அதனைப் போலவே தெய்வீக மூலிகை பெருமையுடன் வழங்கும் எருக்கம் பூவில் ஒன்பது வகைகள் இருக்கின்றன. குறிப்பாக விநாயகர் வழிபாட்டில் கட்டாயம் எருக்கம் பூ அதிகமாக இருக்கும். விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம் பூ என்று புராணம் கூறுகிறது. இதனை அர்க்க புஷ்பம் என்பர். அர்க் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரை போலவே சூரியனுக்கும் எருக்கம் பூ உகந்தது.

சூரியனுக்கு அர்த்தம் என்ற பெயரும் உள்ளது. இறக்கம்பூ மாலையை விநாயகருக்கு அறிவித்தால் தடைகள் நீங்குவதோடு சூரியனின் அருளால் ஆத்ம பலம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும். இதனைப் போலவே அருகம்புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது. அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்த்தவர்களை அனலாய் மாற்றி தகித்து விடுவான். இப்படிப்பட்ட இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.

அவர்கள் சிவன் மற்றும் பார்வதியை சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூதக்களங்களுடன் போருக்கு சென்றார். ஆனால் அங்கு அவை எரித்து சாம்பலாக்கப்பட்டன. விநாயகரே நேருக்கு நேர் மோதினார். ஆனால் வெற்றி கொள்ள முடியவில்லை. அதனால் கோபத்தில் விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடைய செய்தான். விநாயகரால் அந்த வெப்பத்தை தாங்க முடியவில்லை.

அவருக்கு குடம் குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.இருந்தாலும் பயன் கிடைக்காததால் முனைவர் ஒருவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரின் எரிச்சல் உடனே அடங்கி அடலாசுரன் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.அதனால் தான் அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார். எனவே நம்முடைய வேண்டுதல்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் விநாயகருக்கு எளிமையான அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறு விடும் என புராணம் கூறுகிறது.

Categories

Tech |