நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி கடும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது. விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு போலீஸ் அனுமதி பெற்றிருக்கவேண்டும். சிலை வைக்கப்படும் இடங்களில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க வாகனங்களில் எடுத்துச் செல்லலாம் ஊர்வலமாக செல்ல தடை என்று தெரிவித்துள்ளது.