ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர்சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ம் தேதி வருகிறது. நாடு முழுதும் பிள்ளையார் அவதரித்த இந்த நாளை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் நம் சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையில் எவ்வாறு சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும் விநாயகர்சதுர்த்தியை கொண்டாட முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சந்தையில் கிடைக்கக்கூடிய விநாயகர் சிலைகள் பிளாஸ்டிக் (அல்லது) வேறு சில மக்காத பொருட்களால் செய்யப்படுகிறது. ஆனால் பாரம்பரிய களிமண்ணால் சிலைகளை, 100% மக்கும் தன்மை கொண்டவையாக உருவாக்கி நீரில் கரைப்பது சிறப்பான ஒன்று. நம் வீட்டிலேயே சிறியளவிலான விநாயகர் சிலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் சிலைக்கு அலங்கார பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு புது பூக்கள் இலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். அத்துடன் வண்ணங்களுக்கு பதில் பச்சரிசி மாவு மூலம் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்யலாம்.
இவற்றில் வண்ணம் கலக்க சந்தனம், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். களிமண்ணில் பிள்ளையார் செய்யும்போது அவற்றில் ஒரு விதையை வைத்து செய்யவேண்டும். அதன்பின் செடி வைக்கும் தொட்டிகள் கரைப்பதன் வாயிலாக ஆண்டுக்கு ஒரு செடியை வளர்க்கும் நடைமுறையும் தற்போது இருக்கிறது. திருவிழா காலங்களில் பயன்படுத்தப்படும் பூக்கள், மாலை ஆகியவற்றை குழிகளில் இட்டு உரங்களாகவும் மாற்றலாம்.
முடிந்தவரையிலும் பாலீத்தின் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும். தேவையான நேரத்தில் மட்டும் மின்விளக்குகளை ஒளிர விடுவதால் மின்சாரத்தையும் சேமிக்கலாம். அதேபோன்று கோயில்களில் சிறிது நேரம் மட்டும் ஒலிபெருக்கியை பாட விடலாம். இதன் காரணமாக சுற்றுப்புறத்தில் உள்ள வயதானவர், மற்றும் உடல்நிலை குன்றியவர்களுக்கு இடையூறாக இருக்காது. அதனை தொடர்ந்து வீட்டில் வைக்கப்பட்ட பிள்ளையர்களை இறுதியாக நீர் நிலைகளில் கரைக்காமல், ஒரு வாளி தண்ணீரில் மூழ்கடித்து அந்த நீரை செடிகளுக்கு உற்றலாம்.
களிமண் கலந்தநீர் என்பதால் அது உங்களது வீட்டில் உள்ள செடிகளுக்கு நல்ல சத்துக்களை கொடுக்கும். மற்றோருபுறம் களிமண்ணுக்கு பதில் வெற்றிலையிலும் சிலை செய்து கும்பிடுவது ஒரு வழக்கமாகி விட்டது. இதனால் கூடுதல் நன்மை பயக்கும். இந்த சிறந்த பெரு விழாவில் சுற்றுச் சூழலுக்கு நன்மைபயக்கும் வகையில் பிளாஸ்டிக் இல்லா விநாயகரை வழிபடுவதை உறுதிசெய்வோம். ஆகவே சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத நம்மால் முயன்ற நற்செயல்களை இந்த விநாயகர்சதுர்த்தியன்று செய்து மகிழ்வோம்.