Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி… “தமிழகத்தில் அனுமதி மறுப்பது ஏன்?”… பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!!

அண்டை மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தரும் போது, தமிழகத்தில் அனுமதி மறுப்பது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்..

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது வெளியில் விநாயகர் சிலையை வைத்து வழிபடக் கூடாது என்றும், வீட்டில் வைத்து விநாயகரை வழிபட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.. இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..

கட்டுப்பாடுகளை விதித்து பொதுவெளியில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்று அரசு கூறலாம், ஆனால் கொண்டாடக்கூடாது என்று சொல்வது ஏற்புடையதல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார்.. இதற்கிடையே புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் மீண்டும் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, அண்டை மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தரும் போது, தமிழகத்தில் அனுமதி மறுப்பது ஏன்? கடவுள் சிலை செய்வது சட்டப்படி குற்றமா? தமிழர்கள் விருப்பமான கடவுளை வழிபட அனுமதி வேண்டுமா?.. பாஜகவின் சார்பில் ஒரு லட்சம் வீடுகளின் வாசலில் விநாயகர் சிலையை வைத்து அகவல் பாடி வழிபட உள்ளோம்.. பாஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் நம் தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்..

 

 

Categories

Tech |