Categories
அரசியல்

விநாயகர் சதுர்த்தி வழிபாடு….. பிள்ளையார் சிலையை எப்போது வீட்டிற்கு கொண்டு வருவது நல்லது…. இதோ வழிபாட்டு விவரம்……!!!!

இந்தியாவில் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயக சதுர்த்தி விநாயகர் பிறந்தநாள் தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 10 நாட்கள் ஆடம்பரமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த 10 நாட்களில் விநாயகர் பெருமான் பூமியில் அருள்பாலித்து தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் ஞானத்தையும் செழிப்பையும் தருகிறார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து முதன்மை கடவுளாக விநாயகர் அருள் இருந்தால் வாழ்வில் உள்ள தடைகள் விலகி வாழ்க்கை செழிப்பாக இருக்கும். அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஆனது மங்களகரமான பத்ர யோக, ஹம்ச யோக மற்றும் சசக யோகா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சூரியனின் செல்வாக்கின் கீழ் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று புதன், குரு, சனி மற்றும் சூரியன் ஆகிய 4 முக்கிய கிரகங்களும் சொந்த ராசியில் இருப்பதால் இந்த விநாயகர் சதுர்த்தி இன்னும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த நாளில் பத்ரயோக மாலை 3.22 மணிக்கு முடிகிறது. அதன் பிறகு விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் நல்லது.

இதனையடுத்து வருகின்ற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட சிறந்த நேரம் காலை 11.5 முதல் மதியம் 1.38 மணி வரை ஆகும். இந்த நாளில் ரவியோகம் உருவாவதால் சுப காரியங்களை மேற்கொள்வது நல்லது. அதுவும் நல்ல காரியங்களை தொடங்க சிறந்த நேரம் அதிகாலை 5.58 முதல் 12.28 மணி வரை ஆகும்.அதன் பிறகு கணபதி ஸ்தாபனாவுக்கு மனதில் வைத்துக் கொள்ள வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம். * முதலில் விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வரும் முன், வீட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தில் நீரை நிரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து வெற்றிலையால் அலங்கரிக்க வேண்டும். விநாயகர் சிலையை வைக்கும் பலகையை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும். விநாயகர் சிலையின் இடது தோளில் பூநூலை அணிவிக்க வேண்டும். விநாயகர் சிலைக்கு சந்தன திலகம் இட்டு, எருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மற்றும் சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அதன் பின்னர் நெய் தீபம் ஏற்றி, மந்திரங்களை சொல்லி, விநாயகருக்கு பிடித்த மோதகம், கொழுக்கட்டை, லட்டு ஆகியவற்றை படைக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி காண்போம். முதலில் செய்யவேண்டியவை பார்போம், பக்தர்கள் 1 1/2 நாட்கள், 3 நாட்கள், 7 நாட்கள் அல்லது 10 நாட்களுக்கு வீட்டில் விநாயகரை வைத்திருக்கலாம்.  விநாயகர் உங்கள் வீட்டில் விருந்தாளியாக இருப்பதால், முதலில் அவரை வீட்டிற்கு கொண்டு வந்ததும், தண்ணீர், உணவு அல்லது பிரசாதத்தை வழங்க வேண்டும்.  அதன்பிறகு ‘சாத்விக்’ உணவு தயாரித்து, அதை உண்ணும் முன் விநாயகர் சிலைக்கு வழங்க வேண்டும்.  வீட்டில் உள்ள விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகே நீர்நிலை இல்லாவிட்டால், வீட்டில் உள்ள விநாயகர் சிலையை ஒரு வாளி நீரில் மூழ்கடித்து விடுங்கள். இதனையடுத்து விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செய்யக்கூடாதவைகள் பற்றி பாப்போம். வீட்டில் விநாயகர் சிலையை வாங்கி வைத்த பின், பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலையை வீட்டில் வைத்த பிறகு, அவரை கவனிக்காமல் இருக்கக்கூடாது. முக்கியமாக வீட்டை பூட்டிவிட்டு எங்கும் செல்லக்கூடாது.  விநாயகரை நீரில் கரைக்கும் முன், அவருக்கு ஆரத்தி, பூஜை மற்றும் பிரசாதம் வழங்க தவறக்கூடாது.  வீட்டில் விநாயரை வைத்தால், சுப முகூர்த்தத்தில் பூஜையை செய்ய வேண்டும். வீட்டில் விநாயகர் சிலை இருக்கும் வரை இறைச்சி மற்றும் மதுவைத் தவிர்க்க வேண்டும்.  இறுதியாக வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சிலை சிலையை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு, செப்டம்பர் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி நாளில் விநாயகர் சிலையை கரைக்க வேண்டும்.

 

Categories

Tech |