Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

விநாயகர் சதுர்த்தி விரதம் என்றால் என்ன…?

வருகின்ற 22 ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்பட இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம் , விநாயகர் அருள் பெறுவோம்.

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பெற்றமையால் இறுமாப்பு கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களோ , விலங்குகளோ , ஆயுதங்களாலோ யாரும் கொள்ள முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று திணறினர்.

எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரணடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை யானை முகமும் மனித உடலும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார். விநாயகருக்கும் , கஜமுகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது முடிவில் விநாயகப் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க நேரிட்டது. விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

பின்னர் அவர் மூஞ்சுறுவை தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன் மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.அன்று முதல் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும், சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |