Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா… செம்பட்டியில் 400 சிலைகள் தயார்…!!!!!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளப்பட்டி, ஐயம்பாளையம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக செம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வந்துள்ளது. அதன்படி மூன்று அடி ஐந்து அடி மற்றும் 7 அடி உயரத்தில் பல்வேறு கோணங்களில் 400 விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின் அதற்கு வண்ணம் பூசி அழகுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே தயாரான விநாயகர் சிலைகள் கொடைக்கானல், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேற்று லாரி மற்றும் மினி வேன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்ற விநாயகர் சிலைகள் வருகின்ற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அந்தந்த பகுதிகளை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற இருக்கின்றது. அதன் பின் மறுநாள் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் வானவேடிக்கையுடன் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |