Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” சிலைகளை வைப்பதற்கான விதிமுறைகள்…. டிஎஸ்பியின் முக்கிய அறிவிப்பு….!!!!

விநாயகர் சதுர்த்தியின் போது அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது என டிஎஸ்பி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. இந்த கொரோனா பரவல் தற்போது குறைந்ததால் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வர இருப்பதால் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மாவட்டம் முழுதும் உள்ள பல்வேறு இடங்களில் 501 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சுதாகர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு ஆர்டிஓவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அரசு அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. அதன் பிறகு ஒரு சிலையை வைக்க வேண்டும் என்றால் அந்த இடத்தின் உரிமையாளரிடம் கண்டிப்பாக அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து சிலைகள் வைக்கப்படும் இடங்களில் தீயணைப்புத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின் வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் விநாயகர் சிலைகளை வைப்பதற்காக அனுமதி பெற வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றால் மட்டுமே போதுமானது. வேறு எந்த இடத்திற்கும் சென்று அலைய வேண்டிய தேவை இல்லை. விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்யும்போது ஒலிபெருக்கி வைக்க வேண்டும் என்றால், அதற்கான அனுமதி பெற்றுவிட்டு, காலை மாலை என இரு வேலைகளில் மட்டும்தான் ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை அதிகாரிகள் கூறிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். மேலும் சிலைகள் வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் கண்டிப்பாக சிலையை கரைத்து விட வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |