Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” சூடு பிடிக்கும் சிலை விற்பனை….. ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்….!!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. இந்த வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தியை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பெரிய விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பார்கள்.

இதேபோன்று சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபடுவதும் வழக்கம். இதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மூலக்கடை, புரசைவாக்கம், மயிலாப்பூர், கோயம்பேடு உள்ளிட்டா பல்வேறு மார்க்கெட்டுகளில் மண்ணால் செய்யப்பட்ட சிறிய பிள்ளையார் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிலைகளை வாங்குவதற்கு பொது மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சிறிய வடிவிலான பிள்ளையார் சிலைகள் 80 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |