விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மக்கள் வீடுகளிலேயே விநாயகர்சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் 40 ஆண்டு காலமாக வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.
பின்னர் அந்த விநாயகரை கடலிலே கறைப்பார்கள். இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலங்களை கைவிடுகிறோம், விநாயகர் சிலை நிறுவ வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் சிலையை நிறுவ அரசு விதித்த தடையை உடனடியாக கைவிட்டுவிட்டு, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விழிப்புணர்வோடும் விநாயகரை வணங்குவது உறுதி என்றும் முருகன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.