Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“விநாயகர் சிலைகளை கரைக்க 10 இடங்களில் அனுமதிக்கப்படும்”…. குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகின்ற 31-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதற்கு பல வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கின்றது. கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாயத்தை தருகின்றது. ஆகையால் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டிருக்கின்ற இடங்களில் மட்டும் தான் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறையின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, பள்ளிக்கோணம் கடற்கரை, வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காப்பட்டணம் கடற்கரை, திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பத்து இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என அதில் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |