Categories
மாநில செய்திகள்

விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்தலாம்…. “ஆனால் இதையெல்லாம் செய்யக்கூடாது”…. நிபந்தனை விதித்த ஐகோர்ட் கிளை..!!

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை

சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், புழுதிப்பட்டி ஊராட்சியில் பாலதண்டாயுதமான சுவாமி திருக்கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பதற்கும், வைக்கப்பட்ட சிலையை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.. இதேபோன்று மதுரை, தேனி, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தன்மையை பொறுத்து தொடர்படைய காவல்துறை அதிகாரிகள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டனர்.. நீதிபதி முரளி சங்கர் கூறிய உத்தரவில், விநாயகன் ஊர்வலத்தின் போது பங்கேற்பாளர்கள் எவரும் எவ்வித ஆபாச நடனமோ, பேச்சோ பேசியிருக்கக் கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக் கூடாது. எந்தவித அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதி குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது.

எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது. மதம் அல்லது மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் ஊர்வலம் இருக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை பொருட்களையும் மதுபானங்களையும் உட்கொள்ளக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் பொறுப்பாவார்கள்.. விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுத்து அத்தகைய திருவிழாவை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அதிகார சுதந்திரம் உண்டு என தெரிவித்து இந்த நிபந்தனைகளை உரிய அனுமதியோடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்..

 

Categories

Tech |