Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சிலையை கரைக்க போனபோது…. குபீரென்று வெளிவந்த முதலை… அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்…!!!

குஜராத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளத்திலிருந்து திடீரென 4 அடி நீள முதலை ஒன்று வெளிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த குளத்தில் பொதுமக்கள் தாங்கள் வழிபட்ட விநாயகர் சிலைகளை கொண்டு சென்று கரைத்துள்ளனர்.

அப்போது அந்த குளத்திலிருந்து 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று திடீரென வெளியே வந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் மீட்பு பணிக்காக சம்பவ இடத்திற்கு வந்த வனவாழ் அதிகாரிகள் குளத்திலிருந்த முதலையை மீட்டு வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதற்கிடையே அந்த முதலை குளத்தின் அருகே உள்ள விஸ்வாமித்ரி ஆற்றிலிருந்து தப்பி வந்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |