விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ 5000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் தொடங்குவதற்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.. இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் என்பது பொது இடங்களில் சிலை வைத்து விழாவை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதே தவிர, தனி நபர் அவர்களுடைய வீடுகளில் கொண்டாடுவதற்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை..
மேலும் தமிழக அரசசின் கட்டுப்பாடு என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தமிழகத்திலும் இதற்கான கட்டுப்பாடுகள் என்பது விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகையின் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காரணத்தால், அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று என்பது மிக அதிகமாக பதிவாகியுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் முழுமையாக குறைந்து இருந்தாலும் கூட முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கொரோனா தொற்றுஅதிகரித்து வருகிறது. அதனால் தான் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் ஒரு முக்கியமான அறிவிப்பை முக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.. அதாவது, விநாயகர் சிலை செய்யும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.. ஏற்கனவே மழைக்காலங்களில் அவர்களுக்கு 5,000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.. தற்போது மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில், சிலை செய்து வரும் 3,000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், கூடுதலாக ரூ 5000 வழங்கப்பட்டு மொத்தம் ரூ 10,000 வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராததால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக சிலை செய்பவர்கள் தங்களது வேதனையை கூறிவந்தனர்.. இந்த நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.