Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

விந்தணு அதிகரிக்க…பெண்கள் விரைவில் கருத்தரிக்க…இதோ வழிகள்!!

“விட்டதடி ஆசை விளாம்பழம் தோட்டோடு” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்க இருவரும் விளாம் பழத்தையோ, கிடைக்காத பட்சம் அதன் ஓட்டையாவது( மேல் தோல்) கசாயமாக்கி காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகி குழந்தை பேறு உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு. விளாம்பழத்தில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட நோய் அணுக்களை அழிக்கும் திறன் உள்ளது.

“அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்” என்ற பழமொழி உண்டு. அரசமரத்தில் சூலத்தை வலுவாக்கும் அழலையை நீக்கும் பொருள் உள்ளதால் ஆண், பெண்  இருவரும் குளித்தவுடன் ஈரத் துணியுடன் சுற்றினால் அரச மரத்தில் இருக்கும் சத்துக்கள் ஈர்க்கப்பட்டு குழந்தை உண்டாகும்.

“மாதுளை வளர்ந்த வீட்டில் களக்கமில்லை” என்ற பழமொழி போல ஆண், பெண் இருபாலருக்குமே மலட்டு தன்மை நீங்கி விடும். ஆண்களுக்கு விந்துக்களின் எண்ணிக்கை பெருகும். பெண்கள் மாதுளம்பூ கஷாயத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து தினசரி பருகி வர, கருப்பை உஷ்ணம் மற்றும் கிருமிகள் நீங்கி விரைவில் கருத்தரிப்பர். ஆண்களும் மாதுளை பழ விதைகளை ஜூஸ் செய்து சாப்பிட மூன்று மாதத்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை அளவில் அதிகரித்து குழந்தை பிறக்க வழி ஏற்படும்.

புளிக்காத தென்னங்கள்ளை குடித்து வந்தால் அழகான குழந்தை பிறக்கும்.

பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்குவதுடன் ஆண்மை அதிகரிக்கும்.

Categories

Tech |