ஆற்று தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கொலவரப்பள்ளி என்ற அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் நேற்று தென்பெண்ணை அணையில் இருந்து கொலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆனால் தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரங்களில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் கொலவரப்பரப்பள்ளி அணையில் தண்ணீர் துர்நாற்றம் விசுவதோடு மட்டும் இல்லாமல் நுரையுமாக வருகிறது. இதனை பார்க்கும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.