செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அம்மா மறைவிற்குப் பிறகு, ஓபிஎஸ் முதல்வராக தேர்வானது என்பது எங்களுக்கு தெரியாது, தலைவர்களுக்கு தான் தெரியும். தலைவர்கள் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்து அவர்கள் முதலமைச்சராக நியமிக்கிறார்கள். பிறகு சின்னம்மா முதலமைச்சராக வரவேண்டும் என்று கேட்டபோது அவர் கையொப்பமிட்டு ராஜினாமா செய்துவிட்டு தான், அவர் இந்த பஞ்சாயத்தை கூட்டுகிறார்.
அது அவர்களுடைய உடன்பாடு, என்ன இருக்கிறது ? என்று எனக்கும், உங்களுக்கும் தெரியாது, அந்த உடன்பாட்டின்படி அவர்கள் வலியுறுத்தி இருக்கலாம். அதில் இவர் உடன்படாமல் போயிருக்கலாம். அம்மா இருக்கிற வரைக்கும் இரண்டு முறை முதல்வர் பதவியை ஒப்படைத்து இருந்தார்…. அம்மா இருந்த போது இவர் ஒப்படைக்காமல் இருக்க முடியுமா ? அதை நீங்கள் விசுவாசத்தின் அடையாளமாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதில் மாற்று கருத்து இல்லை, அதே மாதிரி இங்கேயும் ஒப்படைத்து நீங்கள் கழகப் பணியை சிறப்பாக செய்து இருந்தால்,
இந்நேரம் நீங்கள் இருக்க வேண்டிய உயரம் என்பது கழக தொண்டர்கள் இடத்திலே மிக உயரத்தில் இருப்பீர்கள். அன்றைக்கு செய்த பாவத்தை இன்றைக்கு, தீதும் நன்றும் பிறர் தர வாரா இதுதான் இன்றைக்கு இருக்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், இதுதான் இருக்கக்கூடிய நிலைமை. அன்றைக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நாம் பயணித்து பார்க்கலாம். இயக்கத்திற்கு வலிமை கிடைப்பதற்கும், இயக்கத்தை செயலாக்கத்திற்கு கொண்டுவருவதற்கும், அன்னைக்கு வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.
அதை நடைமுறையில் செயல்பாட்டில் பல பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.ரஜ்ஜயசபா பார்த்தீர்கள் முடிவு எடுக்க முடியவில்லை. கடைசி நிமிடம் வரைக்கும் காங்கிரஸ் எப்போதுமே ஆலோசித்து முடிவெடுக்கும் என்று சொல்வார்கள். அவர்கள் கூட தயாராகி விட்டார்கள், இரண்டு பேர் இருக்கிறார்கள் அதில் ஒருவர் வரப்போகிறார், பா சிதம்பரம் வரப்போகிறாரா, கே.ஸ் அழகிரி வரப்போகிறார்கள் என்று சொல்லிவிட்டார்கள். நாம் எதுவும் சொல்ல முடியல என தெரிவித்தார்.