வலிமை திரைப்படத்தில் அஜித் பேசிய பஞ்ச் வசனமானது ரஜினியை விமர்சிப்பதாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீசாகி உள்ளது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். வலிமை திரைப்படத்தை அவரின் ரசிகர்கள் பாராட்டி வந்தாலும் சிலர் பாராட்டுகளுடன் கூடிய விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர். ஆனால் திரைப்படத்தின் வசூல் சிறிதும் குறைவில்லை. இத்திரைப்படம் ரிலீஸ் ஆகிய முதல் நாளிலேயே 34 கோடியை தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்திருக்கின்றது.
இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் பேசிய வசனம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அஜித் தனது ஒவ்வொரு படத்திலும் பஞ்ச் வசனம் பேசுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் பேசிய வசனமானது ரஜினியை விமர்சித்து கூறுவதாக உள்ளது என சிலர் கூறி வருகின்றனர். அந்த வசனமானது சிஸ்டம் சரியில்லன்னு நாம தான் சொல்றோம். ஆனா நமக்கு ஒரு விஷயம் நடக்கும்போது சாதமாக பேசுகின்றோம்… நாமதானே அந்த சிஸ்டம் என கூறி இருக்கின்றார். இந்த டயலாக் ரஜினியை விமர்சிப்பதாக அமைந்திருக்கின்றது என ரசிகர்கள் கூறுகின்றனர். சென்ற 2018 ஆம் ஆண்டு அரசியல் பற்றி கூறும்பொழுது, ரஜினி சிஸ்டம் சரி இல்லை. அதை சரி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த இந்த டயலாக் ரஜினியை விமர்சிப்பதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.