Categories
சினிமா தமிழ் சினிமா

“வின்னர் 2 உருவாவதை உறுதி செய்த பிரசாந்த்”…. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்….!!!!!

பிரசாந்த் நடிப்பில் வின்னர் 2 திரைப்படம் உருவாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ”வின்னர்” படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது என கூறலாம். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்தது. மேலும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் இவர் நடித்து வந்தார். தற்போது இவர் ‘அந்தகன்’ படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் பிரசாந்த் அன்மையில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, அந்தகன் படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. விரைவில் படம் வெளியாகும். வின்னர் 2 திரைப்படம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும். ரசிகர்கள் என் மீது அதிக அளவு அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |