Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி” 38 பேர் பாலியல் உறவு…. ப்ரோக்கர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மோகன் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடந்த 13-ஆம் தேதி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது விபச்சாரம் நடப்பது உறுதியானதால், அங்கிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, 1 இளம் பெண்ணையும் மீட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ப்ரோக்கர் பால்ராஜ் என்பதும், வாடிக்கையாளராக வந்திருந்த பச்சையப்பன் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இளம் பெண்ணிடம்  விசாரணை நடத்தியதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. இந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த சிறுமியை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து போக்சோ வழக்கில் பால்ராஜ் மற்றும் பச்சையப்பன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டிலிருந்த செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்ததில், 38 பேர் வரை சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த 38 பேரின் விவரத்தை சேகரித்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சேது, செல்வகணபதி, ஜெகதீஷ், சரவணன், சுசீந்திரன், வினோத் குமார், கவியரசன், மணிகண்டன், சங்கர், சாரதி, சத்தியபாலன், சிலம்பரசன், பாலாஜி, சதீஷ்குமார், ஜெயபிரகாஷ், ரஞ்சித், அருள்குமார், தாரா ராம், பிரேம்குமார், சுரேஷ் ஆகிய 25 பேரை கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அதன் பிறகு வழக்கில் தொடர்புடைய புரோக்கர் பால்ராஜின் மனைவி உமா, ராஜா, ஜெகன், கரிகாலன், சுபீந்திரன் உட்பட பலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வழக்கில் சில அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |