விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பக்கத்தில் ஆரோ என்ற இடம் உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு புகழ்பெற்ற இடம் ஆகும். இந்தப் பகுதிக்கு உள் மாநிலத்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்றனர். இதற்காக ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த ஆரோ பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும். இவர்களின் வசதிக்காகவே குயிலா பாளையம், பட்டனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இந்த தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண் உட்பட இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து உள்ளனர். மேலும் இதுபோன்று பட்டானூர் பகுதியில் சோதனை செய்தபோது அங்கிருந்த பெண் ஒருவர் தப்பி ஓடினார். இது குறித்த தீவிர விசாரணையில் சிதம்பரத்தைச் சேர்ந்த சிதம்பரக்கனி, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கார்த்தி, புவனகிரி பகுதி சேர்ந்த தமிழ்செல்வன் ஆகிய மூன்று வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதற்காக அமைக்கப்பட்ட தங்கும் விடுதிகளை விபச்சார கூடமாக மாற்றி வருவது அங்குள்ள பொதுமக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்று நடக்காமல் தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.