பாலியல் தொழில் செய்யும் பெண் வேடத்தில் நடித்த பிரபல நடிகையான அலியாபட்டை ஹிந்தி திரையுலகத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்.
ஹிந்தி திரையுலகின் பிரபல இயக்குனரான சஞ்சய்லீலா பன்சாலியின் பத்தாவது படமாக ‘கங்குபாய் கத்தியபடி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் நடிகர் நடிகைகளின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். அதனால் ஆலியா பட்டின் திறமையை இப்படத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இப்படம் மும்பையில் விபச்சார தொழில் செய்யும் பெண்’தாதா’ கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இப்படத்தில் நடிக்க பிரபல நடிகைகள் பலர் மறுத்துள்ள நிலையில், ஆலியா பட் தைரியத்துடன் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என இயக்குனர் எதிர்பார்க்கிறார். தற்போது இப்படத்தின் கதை,இசை,நடிப்பு ஆகியவை ஹிந்தி திரையுலகமே மிகுத்த பரபரப்பாக பேசிவருகின்றனர்.