தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெற்றது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்தனர். இதையடுத்து தற்போது போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர். விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு முதலமைச்சரின் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.