Categories
மாநில செய்திகள்

விபத்தில் உயிரிழந்த 2 காவலர் குடும்பத்திற்கு…. தலா ரூ.25 லட்சம் நிதியுதவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று நள்ளிரவு கார் விபத்து ஏற்பட்டது இந்நிலையில் இன்று அதிகாலை அதிவேகமாக வந்த சுற்றுலா வேன் ஒன்று போலீசார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் தேவராஜன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌, இச்சம்பவத்தில்‌ உயிரிழந்த சிறப்பு காவல்‌ உதவி ஆய்வாளர்‌ சந்திரசேகர்‌, காவலர்‌ தேவராஜன்‌ ஆகியோரின்‌ குடும்பத்திற்கு தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொண்டார்‌.

மேலும்  தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் மேலும் கருணை அடிப்படையில் இரண்டு போலீசாரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |