Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்… வழியிலேயே வந்த வினை… கோர சம்பவத்தால் பறிபோன உயிர்கள்..!!

கறம்பக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்புடுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ராமு மற்றும் அவரது மனைவி பெரிய நாயகி குடும்பத்துடன்  வசித்து வந்தார்கள். இந்நிலையில்  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள  மெனட்ராயன் விடுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன் -மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வேன்  ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கணவன் -மனைவி  இருவரும் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |