விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கூந்தூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்ற 2014 ஆம் வருடம் ஜூலை 6ஆம் தேதி விருத்தாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பொழுது பெத்தநாயக்கன்குப்பம் என்ற இடத்தில் பேருந்து சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதால் விபத்தில் தேவராஜன், வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் காயமடைந்ததையடுத்து இவர்கள் மூலம் நஷ்டஈடு கேட்டு கடலூர் ஒன்றாவது வார்டு நீதிமன்றத்தில் தேவராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிமன்றம், விபத்தில் காயமடைந்த தேவராஜனுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூபாய் 32 லட்சத்து 36 ஆயிரத்து 702 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு தரவில்லை. இதனால் தேவராஜன் நிறைவேற்று மனுதாக்கல் செய்ததின் பெயரில் நீதிமன்றம் தேவராஜனுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் வட்டியுடன் 52,02,590 ரூபாய் வழங்க வேண்டும் என கூறியது.
இல்லையெனில் பஸ் சப்ஜி செய்யப்படும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்காததால் கடலூர் பஸ் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தார்கள்.