Categories
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கியவருக்கு திருஷ்டி சுற்ற ஆட்டுக்குட்டியை கொண்டுவந்த உறவினர்கள்…. பின் நடந்த ஆச்சரிய சம்பவம்….!!!!

கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரும், இவரது சகோதரியும் சென்ற சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கீழே தவறிவிழுந்ததில் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் முருகனுக்கு பல பேரின் கண் திருஷ்டி இருந்ததே விபத்துக்கு காரணம் என உறவினர்கள் நம்பியதால் இதற்கு பரிகாரம் செய்ய யோசித்து உள்ளனர். இந்நிலையில் முருகன் திருமணமாகாதவர் என்பதால் அவரது குல வழக்கப்படி உறவினர்கள் மருத்துவமனைக்கே ஆட்டுக்குட்டியை கொண்டுவந்து அவருக்கு திருஷ்டி சுத்தி பலியிட்டுள்ளனர். இச்சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் மட்டும் அங்கு சுற்றியிருந்த நபர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Categories

Tech |