Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய சிறுவன்…!!

17 வயது சிறுவன் சாராயம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் சேந்தமங்கலம் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து திருநாவலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கிய காரை பார்த்துள்ளனர். அப்போது அந்த காருக்குள் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் காருக்குள் இருந்த  சாராயத்தை  பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் 200 லிட்டர் சாராயம் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்‌. இந்த சாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு காரின் பதிவு  எண்ணை வைத்து கார் ஓட்டுநர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தஞ்சாவூரில் வசிக்கும் ஒருவருக்கு இந்த கார் சொந்தமானது என்பது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையின் போது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக 17 வயது சிறுவன்  காரை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து  காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Categories

Tech |