Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய குட்டி யானை…. இதயம் நின்று போன பின்பும்…. உயிர்பிழைத்த ஆச்சர்யம்…!!

விபத்தில் சிக்கிய குட்டி யானையை உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தாய்லாந்தில் உள்ள சந்தபூரி என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குட்டி யானை ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த குட்டி யானை இதயம் செயலிழந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்துள்ளது. ஆனால் பைக் ஓட்டுனருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் மீட்பு பணியாளர் மனா ஸ்ரீவெட் என்பவர் தற்செயலாக அப்பகுதிக்கு சென்றுள்ளார். மேலும் இவர் 26 வருடங்களாக பல மனிதர்களுக்கும் புத்துயிர் ஏற்படுவதற்கான முயற்சிகளை செய்து வந்துள்ளார்.

எனினும் தற்போது தான் முதன் முதலில் இந்த குட்டி யானைக்கு  சிபிஆர் முயற்சி செய்து பார்த்துள்ளார். அதாவது தன் இரு கைகளாலும் அந்த குட்டி யானையின் இதயப் பகுதியில் அழுத்தம் கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் குட்டியானை உயிர் பிழைத்துவிட்டது. மேலும் இது குறித்து மனா கூறுகையில், “ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்பது தான் என் நோக்கம்” என்றும்  தான் வரும் வழியில் குட்டி யானையின் தாயும் பிற யானைகளும் சேர்ந்து குட்டி யானையை அழைத்து கொண்டிருந்ததைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நான் இதை இணையத்தளத்தில் உள்ள ஒரு வீடியோவை அடிப்படையாகக் கொண்டு தான் முயற்சி செய்தேன். உடனே குட்டி யானை நகர்ந்து சென்றதை பார்த்து ஆனந்தத்தில் கண் கலங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் குட்டி யானையை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்று பின்னர் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே கொண்டுவந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த குட்டி யானையின் சத்தம் கேட்டு தாய் யானை மற்றும் பிற யானைகளும் அந்த இடத்திற்கு வந்து குட்டி யானையை அழைத்து சென்றுள்ளது. மேலும் குட்டி யானையின் உயிரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |