தப்பி ஓடிய சரக்கு வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவர்ந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான சரக்கு வேனை அப்புறப்படுத்தி அதிலிருந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர்.
அதில் 25 முட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது ரேஷன் அரிசியை கடத்தி சென்ற போது வேன் விபத்தில் சிக்கியதால் ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.