தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை ரம்பா. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் கலக்கியவர். பிறகு சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது திருமணத்திற்கு பிறகு சுத்தமாக சினிமா பக்கம் வருவதை கிடையாது.
இவர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது மூன்று பிள்ளைகளுடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் அண்மையில் தனது பிள்ளைகளுடன் ரம்பா கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவரின் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் சரியாகி வீடு திரும்பியுள்ள நிலையில் விபத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை மாற்றி வருவதாக நடிகை ரம்பா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க