Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விபத்தில் சிக்கிய பண்ட்…. “#love ஒயிட் ஹாட்”…. இன்ஸ்டாவில் நடிகை ஊர்வசி ரவுடேலா போட்ட பதிவு…. என்னது?

ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த பண்ட் சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ரிஷப் பந்த் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹரித்வார் எஸ்பி (ரூரல்), ஸ்வபன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ரிஷப்பின் நெற்றியில் 2 வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரிஷப்பின் நிலை சீராக உள்ளது, அவர் இப்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே முழுமையாக குணமடைந்து மீண்டு வர வேண்டும் என முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

இதற்கிடையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். தலைப்பில் ஒரு வெள்ளை இதயத்தையும் ஒரு வெள்ளை புறாவையும் சேர்த்து ஹேஸ்டாக்கில் #love என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ஊர்வசி ரவுடேலா ரிசப் பண்டை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் பலர் அவரை கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர்.

இதற்கு ஊர்வசி விளக்கம் அளித்தார். அதாவது வதந்திகளை பரப்பி என்னை கிண்டல் செய்கின்றனர். வதந்திகளை பரப்புவது சரியானது அல்ல. விசாரிக்காமல் நம்புவது சரியல்ல, அவர்கள் நாட்டுக்காக விளையாடுவதால் மதிக்கப்படுகின்றனர் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் விபத்தில் சிக்கிய பண்ட் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் பெயரை குறிப்பிடாமல் ட்விட் செய்துள்ளது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊர்வசி ரவுத்தேலா தமிழில் ‘தி லெஜன்ட்’ படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல ஹிந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். தெலுங்கில் ராம் பொத்தினேனியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்துள்ளார்.

ஹரித்வார் மாவட்டத்தில் மங்களூர் மற்றும் நர்சன் இடையே கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்துக்குள்ளானது. அவர் ரூர்க்கி சிவில் மருத்துவமனையில் முதன்மை சிகிச்சை அளித்த பிறகு டேராடூன் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, கார் மோசமாக எரிந்த நிலையில் காணப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார், “வாகன விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து, அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Categories

Tech |