பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் அவர் மற்றும் குடும்பத்தினர் காயமடைந்தார்.
பிரஹலாத் மோடி தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பந்திபுராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்தார்.
பிரஹலாத் மோடி, தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரனுடன் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பந்திபுராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் டிவைடரில் மோதியது. விபத்து நடந்தபோது அவருடன் அவரது வாகனத் தொடரணியும் பயணித்துள்ளது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதால் காரின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பிரஹலாத் மோடியின் பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, மற்றவர்கள் லேசான காயங்களுடன் மைஸ்ருவின் ஜேஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.