Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய வாலிபர்…. துக்கம் விசாரிக்க சென்ற பாட்டியும் உயிரிழப்பு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ரோந்து வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முடக்குப்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து முடக்குப்பட்டியில் இருந்து அய்யலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடவூர் பிரிவு அருகே பழுதடைந்த நின்ற ரோந்து ஜிப்பை போலீசார் தள்ளி கொண்டு சென்றனர்.

அப்போது முத்து ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் ரோந்து ஜீப்பின் பின்புறம் பயங்கரமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்ததும் முத்துவின் பாட்டியான பழனியம்மாள் என்பவர் மணப்பாறையில் இருந்து ஒரு பேருந்தில் முடக்குப்பட்டிக்கு வந்துள்ளார்.

அப்போது சாலையை கடந்த மூதாட்டியின் மீது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் முத்துவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |